மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.
நாளை திருச்சியில் மாநிலக் குழுக் கூட்டம்
இடைத்தேர்தல் நிலைப்பாடு மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து விவாதிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு விரிவான ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தகவல்
இக்கூட்டம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் கட்சியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து திருச்சியில் நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதன் பிறகு நாளை இறுதி முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இடதுசாரி கட்சியான சிபிஎம் எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
