Homeசெய்திகள்தமிழ்நாடுமக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்!

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்!
“எத்தனை தொகுதியில் நின்றாலும் வெற்றி மட்டுமே இலக்காக இருக்க வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

‘பாரத ரத்னா’ விருது பெறுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த போரூரில் நடைபெற்றது. கட்சியின் துணைத் தலைவர் மவுரியா, பொதுச்செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட முக்கிய மாநில நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க இன்னும் ஒரு வாரத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வார் ரூம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கண்டா வரச் சொல்லுங்க” என போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க., தி.மு.க.!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதி ஒரு தொகுதியோ, மூன்று தொகுதிகளோ (அல்லது) 40 தொகுதிகளோ எத்தனை தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், அந்த தொகுதியிலும் வெற்றி மட்டுமே இலக்காக இருக்க வேண்டும்; அதற்கான தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

MUST READ