Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான நபர் சிறையில் தற்கொலை

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான நபர் சிறையில் தற்கொலை

-

- Advertisement -

புதுச்சேரியில்  9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அவரது சடலத்தை கழிவுநிர் கால்வாயில் வீசிச்சென்றனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த  விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரை முத்தியால்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். தொடர்ந்து இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

we-r-hiring

Dead

இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் இன்று சிறைக் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறைக்காவலர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ