Homeசெய்திகள்தமிழ்நாடு"மணிப்பூர் வன்முறையால் என் இதயம் நொறுங்கிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

“மணிப்பூர் வன்முறையால் என் இதயம் நொறுங்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

-

- Advertisement -

 

"அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
Photo: DMK

மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை ஆடைகளின்றி அழைத்துச் சென்று வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் இன்னும் மவனமாக இருப்பது ஏன்? என ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!

அந்த வகையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தைக் கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. மனித குலத்தின் நல்ல குணங்களை வெறுப்பும், விஷத்தனமும் வேரோடு பிடுங்குகிறது. நமது மனச்சாட்சி எங்கே போனது? மணிப்பூரில் நிகழும் கொடூர வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்!

மற்றவரின் உணர்வுகளை மதிக்கும் குணத்தைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும். மணிப்பூர் முழுவதும் அமைதித் திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ