Homeசெய்திகள்இந்தியா"ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்"- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!

“ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!

-

 

"ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்"- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!
Video Crop Image

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் இன்று (ஜூலை 19) மாலை 03.30 மணிக்கு நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட 33 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில், ஜூலை 20- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர்

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, “நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்த்துள்ளோம். விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம். ஒடிஷா ரயில் விபத்து, மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரபல கஞ்சா வியாபாரி ஆந்திராவில் கைது

2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், பல்வேறு விவகாரங்களை ஒருமித்த குரலுடன் நாடாளுமன்றத்தில் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ