நினைவிடம் தொடர்பாக மன்மோகன் சிங்கின் குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்த மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு எக்ஸ் சமூக வலைதள பதிவில், மன்மோகன் சிங் குடும்பத்தினர் கேட்ட இடத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்காதது ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை அவமதிக்கும் செயலாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 2 முறை பிரதமராக இருந்தவருக்கு பொருத்தமான இடத்தில் நினைவிடம் ஒதுக்காததது ஆணவம் மற்றும் ஒரு தலைபட்சமான முடிவு என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது மன்மோகன் சிங்கின் பங்களிப்பை மக்கள் நினைவுகளில் இருந்து அகற்றும் முயற்சி என தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியதாகவும், பல லட்சம் பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு அரசியல் வாதியை அவமதிப்பு செய்வது நாட்டின் முன்னேற்றத்தையே அவமதிக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தலைச்சிறந்த தலைவர்களை அவமதித்த கறை வரலாற்றில் இருந்து அழியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.