
சென்னை கிண்டியில் இன்று (ஜூலை 16) காலை 10.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், 2023- 24 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசு ஒதுக்கீடு, 7.5% உள் ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று வகையான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
சிக்கன் குழம்பு வைக்காததால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர்
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கிருத்திகா முதலிடத்தைப் பிடித்தார். பொதுக்கலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கவுன்சிலிங் வரும் ஜூலை 20- ஆம் தேதி தொடங்குகிறது.
மூதாட்டியிடம் நகை பறித்த மூவர் கைது
தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடக்கவுள்ளது. தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 40,913 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 5,050 எம்.பி.பி.எஸ். இடங்களும், 200 பிடிஎஸ் இடங்களும், 150 இஎஸ்ஐ இடங்களும் உள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் 4,000 விண்ணப்பங்கள் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.