spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் - TTV தினகரன் வலியுறுத்தல்

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் – TTV தினகரன் வலியுறுத்தல்

-

- Advertisement -

சீர்காழி அரசு தாய் சேய் நல மையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து குறித்து விரிவான ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் வலியுறுத்திள்ளாா்.தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் - TTV தினகரன் வலியுறுத்தல்மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தாய்சேய் நல மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும், பிரசவித்த தாய்மார்களுக்குச் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி ஊசியால்  அவர்களுக்கு திடீர் காய்ச்சல் மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் உடல்நலக்குறைவிற்குக் காரணமாகக் கூறப்படும் நோய் எதிர்ப்பு மருந்தை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் அம்மருந்து விநியோகிக்கப் பட்டிருந்தால் அவற்றின் பயன்பாடுகளை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதைத் தமிழக சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.

we-r-hiring

மேலும், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு உரிய மேல் சிகிச்சை வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு தாய் சேய் நல மையங்களில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு வழங்கப்படும் மருந்துகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே வழங்க வேண்டும் எனவும்  சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளாா்.”

நாளை பேரனுக்கு காதணி விழா…இப்படி அழவச்சிட்டாரே…. ரோபோ சங்கருக்காக ஓடோடி வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்!

MUST READ