spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநாளை பேரனுக்கு காதணி விழா...இப்படி அழவச்சிட்டாரே.... ரோபோ சங்கருக்காக ஓடோடி வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும்...

நாளை பேரனுக்கு காதணி விழா…இப்படி அழவச்சிட்டாரே…. ரோபோ சங்கருக்காக ஓடோடி வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்!

-

- Advertisement -

நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் நேற்று (செப்டம்பர் 18) இரவு 9 மணி அளவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 46 வயதுடைய இவர் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாளை பேரனுக்கு காதணி விழா...இப்படி அழவச்சிட்டாரே.... ரோபோ சங்கருக்காக ஓடோடி வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்!இவருடைய உடல், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இவரின் இறுதிச்சடங்கு இன்று ( செப்டம்பர் 19) மதியத்திற்கு மேல் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரோபோ சங்கருக்காக சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை பேரனுக்கு காதணி விழா...இப்படி அழவச்சிட்டாரே.... ரோபோ சங்கருக்காக ஓடோடி வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்!அந்த வகையில் தனுஷ், விஜய் ஆண்டனி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், சத்யராஜ், எஸ்.வி. சந்திரசேகர், ரேகா, ஐஸ்வர்யா ராஜேஷ், எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, பரத், ராமர், மா.கா.பா, கணேஷ், ஆர்த்தி, அர்ச்சனா என பலரும் திரண்டு வந்து ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் 46 வயது என்பது மரணம் வரக்கூடிய வயது இல்லை என்றும் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நம்மை இப்போது அழ வைத்துவிட்டார் என்றும் தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். நாளை பேரனுக்கு காதணி விழா...இப்படி அழவச்சிட்டாரே.... ரோபோ சங்கருக்காக ஓடோடி வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்!அதுமட்டுமில்லாமல் நாளை (செப்டம்பர் 20) தன்னுடைய செல்லப்பேரன் நட்சத்திரனுக்கு காதணி விழா ஏற்பாடு செய்திருந்த நிலையில் ரோபோ சங்கர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனக் கூறி பலரும் கதறி அழும் காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்கிறது.

MUST READ