வரும் டிசம்பர் 03- ஆம் தேதி அன்று மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் ரூபாய் 5-யைப் பயணக் கட்டணமாகச் செலுத்தி பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மோகன்லால் நடிக்கும் நேரு… புதிய போஸ்டர் வெளியீடு!
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளையையொட்டி, வரும் டிசம்பர் 03- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் ரூபாய் 5 கட்டணத்தில் செல்லலாம். இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே ரூபாய் 5 கட்டணத்தில் பயணம் செய்யும் சலுகைப் பொருந்தும். மெட்ரோ ரயில் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு பொருந்தாது.
பாராட்டு மழையில் ரியோவின் ‘ஜோ’ விமர்சனம் இதோ…!
மெட்ரோவில் டிஜிட்டல் பயணச் சீட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக கட்டண சலுகை வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.