spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமோகன்லால் நடிக்கும் நேரு... புதிய போஸ்டர் வெளியீடு!

மோகன்லால் நடிக்கும் நேரு… புதிய போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

மலையாள ஸ்டார் நடிகரான மோகன்லால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மோகன்லால் ஏற்கனவே வ்ருஷபா, மலைக்கோட்டை வாலிபன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கி வரும் (லூசிபர் 2) எம்புரான் திரைப்படத்திலும் மோகன்லால் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மோகன்லால் நடிக்கும் நேரு... புதிய போஸ்டர் வெளியீடு!

அதே சமயம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நேரு. இந்த படத்தை த்ரிஷ்யம் 1, த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். நீதியை தேடும் கதை அம்சம் கொண்ட படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, விஷ்ணு ஷியாம் இதற்கு இசை அமைக்கிறார். சதீஷ் குரூப் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது.மோகன்லால் நடிக்கும் நேரு... புதிய போஸ்டர் வெளியீடு! அதை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. த்ரிஷ்யம் படங்களின் மாபெரும் வெற்றியின் காரணமாக நேரு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகமாக உள்ளது. சமீபத்தில் இப்படம் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

we-r-hiring

 

 

MUST READ