தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கொரோனா அதிகரிப்பு – அமைச்சர் மா.சு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது, சென்னையில் 200 இடங்களில் நடைபெறுகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்து தற்போது இரட்டை இலக்கத்துக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்கு முன் இரண்டாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 25ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். காய்ச்சல் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு பரவாது. காய்ச்சல் வந்தவர்கள்ம் வெளியில் செல்வதை தவிர்த்து, 3 நாள் வீட்டில் இருந்தாலே போதும். பெரிய அளவில் பதட்டம் கொள்ள தேவை இல்லை. இந்த காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது” என்றார்.