spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்- அமைச்சர் மெய்யநாதன்

மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்- அமைச்சர் மெய்யநாதன்

-

- Advertisement -

மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்- அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை அடுத்த முள்ளூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

Image

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுவது தற்போது வெகுவாக குறைந்துள்ளது, விரைவில் அவர்களுக்கு உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் இந்தாண்டு கூடுதலாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி, தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் சாயப்பட்டறை கழிவு நீர் கலக்காமல் தடுப்பதற்கு 1885 கோடி ரூபாய் மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில் இரண்டரை ஆண்டு காலங்களில் 53 இடங்களில் உள்ள குப்பை கிடங்குகள் பயோ மைனிங் மூலமாக அகற்றப்பட்டு உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

MUST READ