Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்

அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்

-

- Advertisement -

தமிழக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சர்ச்சை தொடர்பாக, அவருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 29) தி.மு.க. மாணவர் அணியினர் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
​அமைச்சர் சரத்குமார் பதவி விலகக் கோரி தி.மு.க. மாணவர் அணியினரின் மாநிலம் தழுவிய போராட்டங்கள் குறித்த தொகுப்புச் செய்தி..
​சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. மாணவர் அணியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அமைச்சர் சரத்குமார் பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ வெளியான விவகாரத்தில், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இப்போராட்டங்கள் நடைபெற்றன.

போதைப்பொருள்
​பல்வேறு மாவட்டங்களில் நடந்த போராட்டங்கள்:
சிவகங்கை: மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராஜ்குமார் தலைமையில், முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலையில் பேருந்து நிலையத்திலிருந்து சண்முகராஜா கலையரங்கம் வரை தி.மு.க.வினர் பேரணியாகச் சென்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், தடையை மீறி முழக்கங்களை எழுப்பிய தி.மு.க. இளைஞரணியினரை போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி: கச்சேரி சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஏராளமான தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தைக் கலைக்க வந்த அரசுப் பேருந்தின் டயருக்கு அடியில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் படுத்துப் போராடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

we-r-hiring

​திண்டுக்கல்: தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “அமைச்சரே குழந்தைக்கு மாத்திரை கொடுப்பதெல்லாம் தகுமா?”, “உண்மை தனித்து நிற்கும், பொய்யே துணை தேடும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதிலும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்: பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் மற்றும் முன்னாள் மேயர் சண். இராமநாதன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களும் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தி.மு.க.வினர் இப்போராட்டங்களுக்கு அனுமதி கோரியிருந்த நிலையில், காவல்துறை நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்திருந்தது. தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தி.மு.க. மாணவர் அணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவங்களால் அந்தந்த மாவட்டங்களில் பெரும் பரபரப்பு நிலவியது.

MUST READ