Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமரைச் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பிரதமரைச் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

-

- Advertisement -

 

udhayanidhi stalin tn assembly

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நாளை (ஜன.04) சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!

வரும் ஜனவரி 19- ஆம் தேதி முதல் ஜனவரி 31- ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுக்கவுள்ளார்.

அத்துடன், மத்திய விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரையும் நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுக்கவுள்ளார்.

“பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை!”

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமரைச் சந்திக்கும் போது தமிழக மழை வெள்ளத்திற்கு கண்டிப்பாக நிவாரணத் தொகை கேட்பேன்; கேலோ இந்தியா போட்டி அழைப்பிதழை வழங்க பிரதமரை சந்திக்கிறேன்; பங்கேற்பது அவரது விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ