spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவைகோவின் உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வைகோவின் உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரை வைகோவிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

we-r-hiring

மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அறிந்து, முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் என்னை அழைத்து தலைவர் உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். நாளை தலைவரை அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்த இருப்பதால் அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்வர் அவர்கள் தெரிவித்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு பதற்றத்துடன் தலைவர் வைகோ அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்கள். என துரை வைகோ பதிவு செய்துள்ளார்.

தலைவர் வைகோ அவர்களின் மீது அக்கறையும் அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், தலைவர் வைகோவின் சுவாச காற்றாக விளங்கும் மறுமலர்ச்சி சொந்தங்கள் அனைவருக்கும் என் நன்றி என்று துரை வைகோ அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

MUST READ