spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநடப்பாண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப்பணி- மு.க.ஸ்டாலின்

நடப்பாண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப்பணி- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

நடப்பாண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப்பணி- மு.க.ஸ்டாலின்

425 கிராம நிர்வாக அலுவலர்கள், 67 வரி தண்டலர்கள் மற்றும் 19 கள உதவியாளர்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

"நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

அவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50,000 பேரை அரசு பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் செலவு செய்து படிக்கும் பயிற்சி அரசு இலவசமாக தருகிறது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசு வேலைக்கு இருக்கும் மவுசு காலத்திலும் குறையாது. ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அவரின் பல தலைமுறைக்கும் பயன் அளிக்கும். அரசு தீட்டும் எந்த திட்டமும் மக்கள் நன்மைக்காகத்தான். அரசு ஊழியர்களில் பலர் தன்னலம் பாராமல் பணி செய்துவருகின்றனர். உடல் உறுப்பு தானம் செய்து முதல் அரசு மரியாதை பெற்றவர் அரசு ஊழியர். உடல் உறுப்பு தானம் செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் வடிவேல் குடும்பத்தினருக்கு நன்றி. அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாட்டு அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

we-r-hiring

அரசு எனும் மாபெரும் இயந்திரம் சிறப்பாக செயல்படுகிறது. அரசு ஊழியர்கள் முழு ஈடுபட்டுடன் பணியாற்ற வேண்டும். ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். எனது கோரிக்கையை ஏற்று எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வு தமிழ் மொழியிலும் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக ஆட்சியில் போட்டித் தேர்வுகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் திருத்தும் பணியில் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு கலைஞர் ஆட்சியில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்படும் தாமத்தை களைய நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதை எளிதாக்க ஆன் ஸ்க்ரீன் எவால்யூஷன் லேப் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேர் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்” எனக் கூறினார்.

MUST READ