Homeசெய்திகள்தமிழ்நாடுபால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

-

பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் எழுந்த மோசமான விமர்சனங்களால் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள விஜிஎன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேஷ், இவரது மனைவி ரம்யா. இருவரும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், ஏழு மாத பெண் குழந்தையும் உள்ளன.

இந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி அப்பார்ட்மெண்டின் நான்காவது மாடியில் இருந்து ஏழு மாத பெண் குழந்தை தவறி கீழே விழுந்தது. முதல் மாடியில் போடப்பட்டிருந்த கூரையின் மீது விழுந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களிலும், செய்தி நிறுவனஙகளிலும் வெளியானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் “தாயின் அலட்சியமே குழந்தையின் இந்த நிலைக்கு காரணம்” என்பது போன்ற பல்வேறு விமர்சனங்களை  கூறி வந்தனர்.

பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

இந்த சம்பவத்தாலும் இது போன்ற தொடர் விமர்சனங்களாலும் ரம்யா மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதனால் ரம்யாவிற்கு மருத்துவத்தின் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து ஒரு மாறுதலுக்காக ரம்யாவை, கோவை காரமடையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வெங்கடேஷ் அழைத்துச் சென்றுள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குழந்தைகள் மற்றும் கணவருடன் பெற்றோர் வீட்டில் இருந்து வந்த ரம்யா, வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணியாற்றி வந்துள்ளார்.  இந்த நிலையில் ரம்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ரம்யாவின் தாய் புஷ்பாவும், தந்தை  வாசுதேவனும் நேற்று முன்தினம் வெளியே சென்றுள்ளனர். அன்றைய தினம் இரவு அறையில் வெங்கடேஷ் மற்றும் குழந்தைகளுடன் தூங்கி உள்ளனர். அனைவரும் தூங்கிய பின்னர் அதே அறையில் ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூக்கத்திலிருந்து கண்விழித்த பின்னர் மனைவி ரம்யா தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களால் ரம்யா மன உளைச்சலில் இருந்ததே தற்கொலைக்கான காரணம் என காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

MUST READ