Homeசெய்திகள்தமிழ்நாடு“அரசு அடக்குமுறையைக் கொண்டு போராட்டங்களைத் தடுக்க முயன்றால், அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் எப்போதும் எங்களுக்கு...

“அரசு அடக்குமுறையைக் கொண்டு போராட்டங்களைத் தடுக்க முயன்றால், அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் எப்போதும் எங்களுக்கு உண்டு” – மு. வீரபாண்டியன்

-

- Advertisement -

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, AISF / AIYF சார்பில் இன்று காலை சென்னை பெரியார் சிலை, சிம்சன் அருகில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் சந்தித்தார்.

we-r-hiring

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற்று வரும் போராட்டம் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரின் எழுச்சிமிக்க போராட்டமாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். போராட்டக் களத்தில் துணை ராணுவத்தைப் பயன்படுத்தி அடக்குமுறையைக் கையாள்வதாகக் குற்றம் சாட்டினார்.

எல்லைகளில் நாட்டைப் பாதுகாப்பதற்குத்தான் நமது வீரமிக்க ராணுவம் உள்ளது என்றும், சொந்த நாட்டின் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும்போது அவர்களை அடித்து ஒடுக்குவதற்கு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். 13 கோடி மக்களின் ஜனநாயக உரிமையைப் பறித்த குற்றத்தை உணர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை பல்வேறு வழிகளில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், மாணவர்களின் உரிமைகள் சார்ந்த போராட்டங்களின்போது தள்ளுமுள்ளு மற்றும் கெடுபிடிகள் நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். சட்டப்பூர்வமாக நடைபெறும் ஜனநாயகப் போராட்டங்களைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றும், அரசு அடக்குமுறையைக் கொண்டு போராட்டங்களைத் தடுக்க முயன்றால் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் போராட்டக்காரர்களுக்கு எப்போதும் உண்டு என்றும் தெரிவித்தார்.

“இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து இடதுசாரிகளை மதிப்பிடக் கூடாது”

இடைத்தேர்தலில் 1,500 வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் இடதுசாரிகளின் பலம் அவ்வளவுதான் என மதிப்பிடுவது தவறானது என்று மு. வீரபாண்டியன் கூறினார். பலவீனமான சில தொகுதிகளில் போட்டியிட்டதால் மட்டுமே குறைவான வாக்குகள் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

மதுரை, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், கோவை, சென்னை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகள் கம்யூனிஸ்டுகளின் தத்துவார்த்தக் கோட்டைகளாக விளங்குவதாகவும், அங்கு பெரிய கட்சிகளுக்கு இணையான வாக்குகளைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் வெற்றி, தோல்விகளை மட்டும் வைத்து இடதுசாரிகளின் பலத்தை மதிப்பிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

பீகாரிலோ, சென்னையின் ஏதோ ஒரு பகுதியிலோ அல்லது வெளிநாடுகளிலோ போர் வேண்டாம் என்று அமைதிக்காகக் குரல் எழுப்பப்படும் இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகளின் தடம் இருக்கும் என்றும், அங்குதான் கம்யூனிசத்தின் உண்மையான அடையாளத்தைத் தேட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வாக்குரிமையைப் பறிப்பது ஜனநாயகப் படுகொலை என்று குறிப்பிட்ட மு. வீரபாண்டியன், அடக்குமுறைகளைத் தாண்டியும் மக்கள் உரிமைக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கும் எனத் தெரிவித்தார்.

அதிமுகவிற்கு அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்: “அதிமுக சுய ஆய்வு செய்ய வேண்டும்” – கூட்டணி அரசியலில் புதிய சர்ச்சை!

MUST READ