spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!

முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!

-

- Advertisement -

மறைந்த பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வத்தின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

we-r-hiring

பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான  முரசொலி செல்வம்  பெங்களுருவில் நேற்று காலமானார். இதனை அடுத்து அவரது உடல் ஆம்புலன்சில்  சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முரசொலி செல்வத்தின் உறவினர்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா தலைவர் வாசன், பாஜக நிர்வாகி தமிழிசை, பா.ம.க. நிர்வாகி ஏ.கே.முர்த்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து இன்று மாலை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து முரசொலி செல்வத்தின் உடல் ஊர்வலமாக புறப்பட்டு பெசன்ட் நகரில் அமைந்துள்ள மின் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, முரசொலி செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முரசொலி செல்வம் குடும்பத்தினர், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திராவிட கழக ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ