spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிழாக்கோலம் பூண்டது முத்தாரம்மன் கோயில் திருவிழா!

விழாக்கோலம் பூண்டது முத்தாரம்மன் கோயில் திருவிழா!

-

- Advertisement -

 

விழாக்கோலம் பூண்டது முத்தாரம்மன் கோயில் திருவிழா!
File Photo

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவையொட்டி, பக்தர்கள் குவிந்தனர். முருகன், விநாயகர், பராசக்தி, ராஜா-ராணி போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து, கடந்த 10 நாட்களாக பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர்.

we-r-hiring

தமிழகத்தில் பா.ஜ.க. நிலை- பார்வையிடக் குழு அமைப்பு!

தசரா குழுக்கள் அதிகம் உள்ள திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல மாவட்டங்களில் இருந்தும் 500- க்கும் மேற்பட்ட குழுவினர் மேளத்தாளத்துடன் நகரில் உள்ள கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி, மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வேடமணிந்து கோயிலுக்கு வந்துள்ளனர். விழாவில், ஒன்பதாவது நாளான இன்று (அக்.23) இரவு அன்ன வாகனத்தில் அம்மன், எழுந்தருளுகிறார்.

மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ!

விழாவின், முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.24) நடைபெறவுள்ளது. இதற்காக, குலசேகரப்பட்டினத்தில் மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

MUST READ