spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் பா.ஜ.க. நிலை- பார்வையிடக் குழு அமைப்பு!

தமிழகத்தில் பா.ஜ.க. நிலை- பார்வையிடக் குழு அமைப்பு!

-

- Advertisement -

 

we-r-hiring

தமிழகத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து பார்வையிடக் குழு அமைத்து பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

லியோ தளத்தில் எடுத்த புகைப்படங்களை வௌியிட்ட அர்ஜூன்

இது தொடர்பாக, பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனைக் குறித்து பார்வையிட நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். குழுவில், முன்னாள் கர்நாடகா மாநில முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதானந்த கவுடா, முன்னாள் காவல் ஆணையரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சத்ய பால் சிங், ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான புரந்தேஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி.மோகன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு மும்பை செல்லும் ரஜினி படக்குழு

இந்த குழு தமிழகத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு, கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தும். பின்னர் விரிவான அறிக்கையைக் கட்சியின் மேலிடத்திற்கு குழு சமர்ப்பிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ