spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'கரும்பு விவசாயி சின்னம்'- நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

‘கரும்பு விவசாயி சின்னம்’- நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

-

- Advertisement -

 

"விடுதலைப் புலிகள் எங்கிருக்கிறது?"- சீமான் சரமாரி கேள்வி!

we-r-hiring

கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!

நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதாலும், தேர்தல் சின்னத்தை மிக தாமதமாகக் கூறியதாலும் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வேறொரு அரசியல் கட்சிக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வழங்கியது.

இதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கட்சி சின்னத்தை ஒதுக்குவது என்பது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டது என்பதால், அதில் தலையிட விரும்பவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தது.

தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ அதிரடி..!!

இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவில் முதலில் வரும் கட்சிக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் வழங்குவதில் தேர்தல் ஆணையத்தின் நடைமுறை விதிகள் சட்டவிரோதமானது எனவும், அதனை மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ