Homeசெய்திகள்இந்தியாதகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ அதிரடி..!!

தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ அதிரடி..!!

-

bengaluru blast

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பதற்கு காரணமாக இருந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 10 லட்சம் சன்பமானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 23ம் தேதி பெங்களூரு ப்ரூக்ஃபீல்டு பகுதியில் இருக்கும் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் சக்திவாய்ந்த இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மக்களவை தேர்தலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகி வரும்போது, இப்படியொரு குண்டு வெடிப்பு சம்பவம் பெங்களூரு போன்ற நகரத்தில் நடந்துள்ளது ஒட்டுமொத்த நாட்டையும் பதற்றமடையச் செய்துள்ளது. தற்போது இந்த சம்பவம் என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் டிஃபன் குண்டு வெடித்து பல பாதிப்புகள் ஏற்பட்டன. அதேபோன்று பல ஒற்றுமைகள் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திலும் கண்டறியப்பட்டுள்ளன. அதனால் என்.ஐ.ஏ அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு தங்களுடைய முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பின் போது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் குண்டுவெடிப்புக்கு காரணமான பையை சுமந்து வரும் நபருடைய புகைப்படத்தை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. அவர்தான் குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த நபராக தேசிய புலனாய்வு முகமை சந்தேகிக்கிறது. அவர் தொடர்பான சன்மானம் வழங்குவோருக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.

அத்துடன் தகவல்களை வெளியிடும் நபர் குறித்த ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்கிற தகவலையும் என்..ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்மந்தப்பட்ட நபர் தொடர்பான விபரங்கள் தெரியவந்தால், யாரை அணுக வேண்டும்… எப்படி அணுக வேண்டும் என்கிற விபரங்களையும் போஸ்டர் மூலம் என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.

MUST READ