spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்த நாதக தலைவர் சீமான்!

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்த நாதக தலைவர் சீமான்!

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது X தளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்த நாதக தலைவர் சீமான்!மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன். அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!

we-r-hiring

உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய்; உன் இனத்தான் அல்லாத அந்நியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே! – இறைமகன் ஏசு

ஊழல், இலஞ்சம், பசி, பஞ்சம், சாதி – மத மோதல்கள், மது, ஆணவப் படுகொலைகள், தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, எதேச்சதிகாரப்போக்கு, அரசப்பயங்கரவாதம், சுரண்டல், வளக்கொள்ளை என இது எதுவுமற்ற சமூகம் மலர இறைமகன் ஏசுவின் நல்லருள் கிடைத்திட இறைமக்கள் எல்லோரும் வேண்டிக்கொள்ளும்படி வேண்டுகிறேன். பெருமகனார் ஏசு அவர்கள் பிறந்திட்ட இப்புனித நன்னாளில் அவருடைய வழியைப் பின்பற்றி, கிறித்துவத்தை ஏற்றிருக்கும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும். இவ்வாறு X தளத்தில் கூறியுள்ளார்.

MUST READ