Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

-

- Advertisement -

2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 7 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

we-r-hiring

பொறியியல் படிப்புக்கான ஜெ.இ.இ. மெயின் முதல் கட்ட தேர்வு ஜனவரி 24 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினாலும் மறுப்பு தெரிவிக்கவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

MUST READ