Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசியலில் புதிய திருப்பங்கள்: திமுக - பாஜக மறைமுக உறவா? மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்...

தமிழக அரசியலில் புதிய திருப்பங்கள்: திமுக – பாஜக மறைமுக உறவா? மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

-

- Advertisement -

தமிழக அரசியலில் நிலவி வரும் தற்போதைய சூழல், திமுக மற்றும் பாஜக இடையிலான மறைமுக அரசியல் நகர்வுகள் மற்றும் எதிர்காலத் தேர்தல் வியூகங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் விரிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.தமிழக அரசியலில் புதிய திருப்பங்கள்: திமுக - பாஜக மறைமுக உறவா? மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

திமுக – பாஜக திரைக்குப் பின்னால் கைகோர்ப்பா?
தமிழக அரசியலில் பாஜகவும் திமுகவும் திரைக்குப் பின்னால் இணக்கமாகச் செயல்படுவதாக எழும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய ஆர்.கே. ராதாகிருஷ்ணன், “மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியுடன் இணக்கமாகப் போவது திமுகவின் வரலாற்று ரீதியான அணுகுமுறையே ஆகும். 1977-ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால் அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே மாறி மாறி டெல்லி அதிகார மையங்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. தற்போதைய சூழலில், காங்கிரஸ் கூட்டணியை விட பாஜகவுடன் இணக்கமாக இருப்பது ஆட்சி நடத்துவதற்குச் சாதகமாக அமையும் என திமுக கருதுகிறது” என்று தெரிவித்தார்.

we-r-hiring

காங்கிரஸ் மீது திமுக அதிருப்தி
காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர்ந்தாலும் அக் கட்சியுடன் பெரும் எச்சரிக்கையுடனேயே அணுகுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், “காங்கிரஸ் கட்சியைச் சார்ந்து இயங்குவதில் திமுகவிற்கு முழு விருப்பமில்லை. குறிப்பாக ராகுல் காந்தியின் அணுகுமுறை மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் சில நடவடிக்கைகள் திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே திமுகவின் மறைமுகத் திட்டமாக உள்ளது” என்றார்.தமிழக அரசியலில் புதிய திருப்பங்கள்: திமுக - பாஜக மறைமுக உறவா? மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

எல்லை வரையறை (Delimitation) விவகாரமும் மத்திய அரசுடன் இணக்கமும் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை சிக்கல்கள் குறித்துப் பேசிய அவர், “மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கணிசமான இடங்களை இழக்க நேரிடும். இது தொடர்பாகத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், மத்தியில் உள்ள பாஜக அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால் மட்டுமே இச்சிக்கலுக்குத் தீர்வு காண முடியும் என்ற யதார்த்தத்தை திமுக உணர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டார.

தமிழக அரசியலில் எழும் விஜய் காரணி
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், ஆரம்பத்தில் அவர் பாஜகவை விமர்சிக்கவில்லை என்ற பேச்சு இருந்தது. ஆனால், தற்போது திமுக அரசிற்கு எதிராக அவர் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார். “நிர்வாகச் சிக்கல்கள், மின்கட்டண உயர்வு மற்றும் ஆளுங்கட்சியின் குளறுபடிகளை விஜய் மக்களிடம் கொண்டு செல்வது திமுகவிற்குப் பெரிய சவாலாக உருவெடுக்கக்கூடும்” என எச்சரித்தார். மேலும், தற்போது தமிழக அரசியல் களம் ஒரு நிச்சயமற்ற மற்றும் சுவாரஸ்யமான சூழலை எட்டியுள்ளது. 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அரசியல் மாற்றங்கள் தமிழக அரசியலின் போக்கை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என்று ஆர்.கே. ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை: தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின்!

MUST READ