தமிழகத்தில் இன்று அதிகாலை முதலே 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக நாடுகளாள் தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புத் தஹிர் அமைப்புக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் சிலர் ஆட்களை சேர்த்து வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்த இயக்கத்துடன் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் அகமது என்.ஐ.ஏ. விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மானாங்கோரையில் உள்ள ஷேக் அலாவுதின் வீடு, சாலியமங்கலத்தில் உள்ள அப்துல் ரகுமான் வீடு, முஜிபில் ரகுமான் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை முடிவடைந்த பின்னர் இது தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.