Homeசெய்திகள்தமிழ்நாடு'வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை'- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!

‘வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை’- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!

-

 

'வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை'- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!
Photo: Minister Thangam Thenarasu

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.

நெருங்கும் தீபாவளி- புத்தாடைகள், அணிகலன்களை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மின்துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் பொறியாளர்களுடன் தமிழக மின்சார மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காணொளி மூலம் ஆய்வு நடத்தினார்.

அதில், மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து, உதவிச் செயற்பொறியாளர்கள் 24 மணி நேரமும் செயலாற்றிட அமைச்சர் அறிவுறுத்தினார். மின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஒரு குழுவிற்கு 15 பணியாளர்கள் வீதம் 5,000 பேரைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதையும், தேவைப்படும் அனைத்து தளவாடப் பொருட்களையும் இருப்பில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். மின்தடை ஏற்பட்டால் முன்னுரிமை அடிப்படையில், மருத்துவமனைகள் குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும்.

5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பேரிடர் காலங்களில் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களை அடையாளம் கண்டு தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதிச் செய்யவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் மின்தடை தொடர்பான புகார்களை 94987- 94987 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கவும், மழைக்காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ