மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நிதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருந்த நிலையில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் 06 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசாணையை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் கட்சி தரப்பில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டிற்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும் வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால் அவர்கள் காலி செய்த பின்னர் புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் எண்ணை இணைப்பு செய்வதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தும் அரசே ஆதார் சட்டப்படி ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய வேறு ஆவணங்களை பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை எனவும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ராஜா மற்றும் நீதிபதி பரதன் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது அதே நேரத்தில் அரசு மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பொருத்தவரை ஆதார் எண் இணைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிற நீதிபதிகள் இந்த மனு அடிப்படை ஆதாரம் மற்ற முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி இந்த ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.




