Homeசெய்திகள்தமிழ்நாடுஅக்.1- ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அக்.1- ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

-

 

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

வரும் அக்டோபர் 1- ஆம் தேதி அன்று சென்னையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளது.

தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி வழக்கின் பின்னணி…!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் அக்டோபர் 1- ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாச்சாத்தி கொடூரம்- குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும், தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

MUST READ