துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த 38 நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடவன்னா பகுதியை சேர்ந்த 38 வயது இளைஞர் கடந்த வாரம் துபாயிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மஞ்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையின்போது அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டது.
இதனை அடுத்து, மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தி தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோழீக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று மாலை முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் மாணவர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது குரங்கு அம்மை அறிகுறி ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.