Homeசெய்திகள்தமிழ்நாடுரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி

ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி

-

ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி

ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரிப்பு, விற்பனை மற்றும் கரைக்கபடுத்துவதை உறுதி படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

18th September is Vinayagar Chaturthi holiday

மதுரையை சேர்ந்த அரசுபாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், விநாயகர் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது விநாயகர் சதுர்த்திய முன்னீட்டு பிரமாண்ட சிலைகள் செய்து பக்தர்கள் கொண்டாடுகிறார்கள், பிளாஸ்டர் ஆப் பாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் இவை ஆறு,குளம், கிணறுகளில் கரைக்கப்படுகின்றன. ஆனால், அவை கரைவதில்லை .இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. இது உடலுக்கும், சுற்றுச் சூழலுக்கும் தீங்குவிளைவிக்கிறது. பிளாஸ்டர் ஆப் பாஸ் பொருட்களால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் எளிதில் கரைவதில்லை. ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை செய்ய அனுமதி இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.எனவே, மதுரையில் களிமண் சிலைகளையே செய்ய அனுமதி அளித்து, அதனை ஆறு, குளத்தில் கரைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

Image

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்க பூர்வாலா, நீதிபதி குமரப்பன் அமர்வில் விசரானைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி தான் விநாயகர் சிலைகளை செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றி ரசாயனம் கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே செய்து விற்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தனர்.

MUST READ