
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார்.
விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் என்றும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘விஜய்க்கு தம்பியாக நடிக்க என்னை தான் கேட்டார்கள்’…… லியோ குறித்து நடிகர் விஷால்!
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அடுத்தக்கட்ட நகர்வாக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்தை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.