தமிழகத்தில் நாளை அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சிகளை வலுப்பெற செய்யும் விதமாக கிராம சபை கூட்டங்கள் குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் உள்ளிட்ட 6 நாட்கள் நடத்தப்பட வேண்டும். கடந்த நவம்பர் 1-ம் தேதி, தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் வந்ததால் அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்பட்டு, அன்று நடக்க இருந்த கிராம சபை கூட்டம் நவம்பர் 23-ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக அரசுதெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பஞ்சாயத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுய உதவிக்குழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் மேமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும்