Homeசெய்திகள்தமிழ்நாடுஓட்டப்பிடாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

ஓட்டப்பிடாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இந்திய ஒன்றியத்தில் ஆதிக்கவாதிகளை அகற்றுவதற்கான பிரச்சாரத்தை கடந்த 23- ஆம் தேதி தொடங்கிய நிலையில், நூறாவது பிரச்சாரக் கூட்டமாக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக துணை பொதுச் செயலாளர் அத்தை @KanimozhiDMK அவர்களுக்கு ஆதரவாக ஓட்டப்பிடாரம் – மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற பரப்புரையில் இன்று வாக்கு சேகரித்தார்.. மக்களாட்சியின் மாண்புகளை சிதைத்து, பாசிச பாதைக்கு நாட்டை இழுத்து செல்லும் பாசிசக் கூட்டத்துக்கு முடிவுகட்டுமாறு, திசையெங்கும் கூடி நின்ற பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

MUST READ