
சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை விதித்து பல்கலைக்கழகப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கிரைம் திரில்லராக உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’……..படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா நாளை (ஜூன் 28) காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி இ.கா.ப., பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்!
பாதுகாப்புக் காரணங்களுக்காக கருப்பு நிற உடை அணிந்து வருபவர்களை பட்டமளிப்பு விழா அரங்கத்தில் அனுமதிக்க முடியாது என காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை விதித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.