Homeசெய்திகள்தமிழ்நாடு"பெரியார் பல்கலை. பதிவாளரை பணியிடை நீக்கம் செய்திடுக"- துணைவேந்தருக்கு அரசு அறிவுறுத்தல்!

“பெரியார் பல்கலை. பதிவாளரை பணியிடை நீக்கம் செய்திடுக”- துணைவேந்தருக்கு அரசு அறிவுறுத்தல்!

-

 

பட்டமளிப்பு விழா: மாணவர்கள் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை!
Photo: Periyar University

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளது.

“தேவரை பற்றி அண்ணாமலை பேசுவது வரலாற்று திரிபு”- நடிகர் கருணாஸ் அறிக்கை!

சர்ச்சைக்கு பெயர்போன சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலு மீதான ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது.

"பெரியார் பல்கலை. பதிவாளரை பணியிடை நீக்கம் செய்திடுக"- துணைவேந்தருக்கு அரசு அறிவுறுத்தல்!

எனினும், பரிந்துரையை செயல்படுத்தாமல் துணைவேந்தர் ஜெகநாதன் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அந்த பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் சங்கம், பதிவாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த சூழலில், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலுவை விரைந்து பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து, அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பதிவாளர் தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ