கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு
திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திட்டு விளையை சேர்ந்தவர் ஆஸ்டின் பெனட். இவர் திமுக ஐ.டி. பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், இந்து முன்னணி கட்சியை சார்ந்த சினிமா ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணன் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான் என்று ஒரு கிறிஸ்தவ மத போதகர் பெண்ணிடம் ஆடுவது போன்ற ஒரு வீடியோவை எடிட்டிங் செய்து பின்னணியில் தமிழ் இசையுடன் பதிவிட்டுள்ளார். மத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் ஆஸ்டின் பெனட் கோரியிருந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் குற்ற எண்:16/23U/S:295(A),506(2)IPC என்ன வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.