spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

-

- Advertisement -

இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 6 நாள் பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். ஜனாதிபதியின் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

we-r-hiring

கேரளாவில் திருவனந்தபுரத்தில் தங்கி இருந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று காலை ஒரு நாள் பயணமாக கன்னியாகுமரி வந்தார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். காலை 9 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மைதானத்தில் வந்து இறங்கினார்.

கன்னியாகுமரிக்கு வந்தடைந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அதன்பின்பு அவர் கன்னியாகுமரி படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் செல் உள்ளார். விவேகானந்தர் பாறையில் அவரை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

பின்னர் அவர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்க்க உள்ளனர். தொடர்ந்து, அங்குள்ள தியான மண்டபத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரௌபதி முர்மு சிறிது நேரம் அங்கு தனியாக அமர்ந்து தியானம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் கன்னியாகுமரி, விவேகானந்தபுரம் பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

MUST READ