spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுக் கல்லூரி மாணவா் விடுதியில் ராகிங்- போலீஸாா் விசாரணை

அரசுக் கல்லூரி மாணவா் விடுதியில் ராகிங்- போலீஸாா் விசாரணை

-

- Advertisement -

அரசுக் கல்லூரி மாணவா் விடுதியில் ராகிங்- போலீஸாா் விசாரணை

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ரேகிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அரசுக் கல்லூரி மாணவா் விடுதியில் ராகிங்; போலீஸாா் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 6000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் செய்யாறு நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.

we-r-hiring

அரசு கலைக் கல்லூரி எஸ்சி, எஸ்டி மாணவர் தங்கும்விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் அந்த விடுதியில் அடிக்கடி கல்லூரி மாணவர்களுக்குள் ரேகிங் சம்பவங்கள் அரங்கேறி வருவது வழக்கம். அதன்படி இன்று அந்த அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் மூன்றாம் ஆண்டு பயிலும் சீனியர் மாணவர்கள் செய்யச் சொன்ன பணியை முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவர்கள் செய்யாததால் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ரேக்கிங் செய்து சாட்டை கயிறு மூலம் ஜூனியர் மாணவர்களுக்கு சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி உள்ளனர்.

Ragging

அரசு மாணவர் விடுதியில் ரேக்கிங் குறித்த வீடியோ தற்போது சமூகவலை தினங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவல் பற்றி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி கல்லூரி முதல்வர் கலைவாணியிடம் கேட்டபோது, பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களின் செயலை பெற்றோர்களுக்கு தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் மூலம் மாணவர்களிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்கள் எட்டு பேர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் இடையே விளையாட்டுக்கு நடைபெற்ற சம்பவமா அல்லது மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் உள்ள கோபத்தின் வெளிப்பாடா என்ற தகவல் விசாரணைக்கு பின் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ