
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 04) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமைத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- அன்வர் ராஜா
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வடகிழக்குப் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாக, வடிகால் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். அறிவித்தத் திட்டங்கள் அரசு ஆணைகளாகி குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்தால்தான் சாதனை. முன்னுரிமைத் திட்டங்களை முழு மூச்சுடன் நிறைவேற்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு அத்திட்டங்களின் பயன்களைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., துறைச் சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.