spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!

-

- Advertisement -

 

மகளிர் உரிமைத் தொகை குறித்து அ.தி.மு.க. எழுப்பிய கேள்வி.... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Photo: TN Govt

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

we-r-hiring

“கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை”- சென்னை காவல் ஆணையர் பேட்டி!

இது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2022- ஆம் ஆண்டு ஜூலை 17- ஆம் தேதி கட்சியின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்துள்ளதாக சபாநாயகருக்கு ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இருக்கையை மாற்றியமைக்க, சபாநாயகரிடம் முறையீட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் இருப்பதால், எதிர்க்கட்சியினர் விவாதங்களில் தலையிடுவதால், கட்சியினரால் திறமையாக செயல்பட முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி காவல்துறை முடிவு!

கட்சியில் புதிதாகத் தேர்வுச் செய்யப்பட்டவர்களை அங்கீகரிக்கும் படி, சபாநாயகருக்கும், சட்டமன்றச் செயலாளருக்கும், உத்தரவிட வேண்டும் இருக்கையை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ