Homeசெய்திகள்தமிழ்நாடு"கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை"- சென்னை காவல் ஆணையர் பேட்டி!

“கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை”- சென்னை காவல் ஆணையர் பேட்டி!

-

- Advertisement -

 

"கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை"- சென்னை காவல் ஆணையர் பேட்டி!
File Photo

கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சிக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், “கருக்கா வினோத் ஆடைக்குள் பெட்ரோல் குண்டுகளை மறைத்து எடுத்து வந்துள்ளார். ஆளுநர் மாளிகை அருகே வந்த பிறகு தான் பெட்ரோல் குண்டுகளை வெளியில் எடுத்துள்ளார்.

கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரே நாளில் சிறையில் இருந்து வெளியே வந்ததால் தொடர்புப்படுத்த முடியாது. விசாரணைக்கு பிறகே கருக்கா வினோத் ஏன் குண்டு வீசினார் என்பது தெரிய வரும். கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்” என்றார்.

“இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியம்”- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு!

அதைத் தொடர்ந்து பேசிய, தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால், “தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக உள்ளது. சாதாரண மக்கள் முதல் உயரதிகாரிகள் வரை பாதுகாப்பாக உள்ளனர். ஆளுநர் மாளிகைக்கு முறையாகப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

MUST READ