
சென்னையில் நடைபெறவிருக்கும் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அனுமதி அளித்திருக்கிறது. கடந்த மாதம் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் அதிகளவில் போலியான டிக்கெட் விற்பனை காரணமாக, குளறுபடி ஏற்பட்டது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனை நடத்துகின்ற நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம், அனுமதிக் கேட்டு, சென்னை காவல் துறையில் 10 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தது.
“மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதற்கு சென்னை காவல்துறை கடும் நிபந்தனைகளுடன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து, அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, இசை நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் செய்திருக்க வேண்டும், பார்வையாளர்களுக்கு தேவையான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.