Homeசெய்திகள்தமிழ்நாடுவிவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

-

விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது.

 

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை கூறி மோசடி செய்ததாக கூறி கணவரிடம் விவாகரத்து கோரி மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.

கணவரிடமிருந்து விவாகரத்து கோரி 2014 ஆம் ஆண்டு திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார். வழக்கு முடிவடையும் நேரத்தில் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று கணவர் தரப்பில் மனு தாக்கல் செய்தனர்.

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதுடன் சேர்த்து வைக்கக் கூடிய மனுவை தள்ளுபடி செய்தது. திருச்சி குடும்ப நல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கணவர் மேல்முறையீடு செய்தார்.

விவாகரத்து வழக்கில் எதிர்தரப்பு மனு தாக்கல் செய்ய கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

MUST READ