ரூ.5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவில் மீட்கப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை கடந்த 2005ம் ஆண்டிற்கு முன்பாக சுபாஸ் கபுரால் கடத்தப்பட்டுஅமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் இருந்தது. பின்னர் தமிழக சிலைக்கடத்தல் அதிகாரிகள் நடடிவக்கை காரணமாக பேங்காங்கிற்கு சிலை கொண்டுவரப்பட்டு, அங்குள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


இந்த நிலையில், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் பாங்காக்கில இருந்த சிலைறைய கைப்பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினிரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து, கலியமர்த்தன கிருஷ்ணர் சிலை கும்பகோணத்தில் உள்ள சிலைத் திருட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட சிலை எந்த கோவிலைச் சேர்ந்தது என்பதை கண்டறிய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மீட்கப்பட்ட சிலையை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பார்வையிட்டு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலிசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


