- Advertisement -
அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்பு
திருவண்ணாமலையில் 8,000 சதுர அடி கொண்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அண்ணாமலையார் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை துராபலி தெருவில் அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் 8,000 சதுர அடிக்கு மேல் உள்ளது. இதில் 3,486 சதுர அடியில் வீடுகள் மற்றும் கடைகள் மூலம் அக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டுக்கு பிறகு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவிலுக்கு வாடகை வருவது நின்றுபோனதாகவும் அந்த இடங்களை சிலர் கையகபடுத்தி மேல் வாடகைக்குவிட்டு சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தொடர்ந்த வழக்கில் கோவிலுக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தலாம் என்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை அடுத்து நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் இரண்டு வீடுகள், நான்கு கடைகளை அகற்றி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் கையகப்படுத்தியது.


