Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 10,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 10,000 கனஅடியாக குறைப்பு

-

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மாநிலத்தில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளிலிருந்து நீர் திறப்பு 9,394 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறப்பு!
File Photo

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கனஅடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 10,000 கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு பாசன கால்வாய்கள் வழியாக 500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகு வழியாக நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

 

MUST READ