spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மாநிலம் முழுவதும் 4,970 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்"- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி!

“மாநிலம் முழுவதும் 4,970 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி!

-

- Advertisement -

 

"மாநிலம் முழுவதும் 4,970 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்"- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி!
Video Crop Image

சென்னை எழிலகத்தில் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 400 மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளது. கனமழை உள்ளிட்ட எந்த சூழல் வந்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

we-r-hiring

“மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

மக்களுக்கு தகவல் கொடுத்த பிறகே நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். சென்னையில் 169 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 22 சுரங்கப்பாதைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் உயிர்ச் சேதம் இல்லாத நிலை உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 85% நீர் இருப்பு உள்ள நிலையில், செங்குன்றத்தில் 82% நீர் இருப்பு உள்ளது.

அரசு மருத்துவமனை கேண்டீன் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மழை பாதிப்பு தொடர்பாக, 24 மணி நேர அவசரகால மையத்தை 1070, 1077 என்ற எண்களில் மக்கள் அழைக்கலாம். 94458-69848 என்ற வாட்ஸ் எண்ணிலும் மக்கள் தகவல் தெரிவிக்கலாம். மாநிலம் முழுவதும் 4,970 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன “. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

MUST READ